- by Editor
- 2 years ago
ஓட்டோவில் கடத்தப்பட்ட மாணவி படுகொலை!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி, எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாணயக்கார மாவத்தைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தல்கஹவத்த, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் ஓட்டோவில் சென்ற சிலர் மேற்படி மாணவியைக் கரந்தெனிய, தல்கஹாவத்த பிரதேசத்தில் வைத்துப் பலாத்காரமாக அழைத்துச் சென்றிருந்தனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.