- by Editor
- 2 years ago
ஜாவா கடலில் கோர விபத்து - காணாமல் போன 243 பயணிகளுடன் கூடிய கப்பல் கண்டுபிடிப்பு
-
- by Editor,
- 3 weeks ago
- in உலக செய்திகள்
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து இதுவரை 103 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 140 பயணிகள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த கப்பலில், விபத்து இடம்பெற்றபோது மொத்தம் 243 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.