Friday, October 9, 2026

இளைஞரை அடித்து கொன்ற பொலிஸ் - நேரில் சென்று ஆறுதல் கூறிய த.வெ.க தலைவர் விஜய்!


இளைஞரை அடித்து கொன்ற பொலிஸ் - நேரில் சென்று ஆறுதல் கூறிய த.வெ.க தலைவர் விஜய்!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் இருக்கும் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்ற பொலிஸார் கொடூரமாக தாக்கியதில் அவர் மரணம் அடைந்தார்.

மிளகாய்பொடி தூவி தண்ணீர் கூட கொடுக்காமல் அவரை மிக கொடூரமாக கொடுமைப்படுத்திய போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நடிகரும், த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு போராட்டத்தையும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் நேரில் சென்று அஜித் குமார் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார், அவ்வேளை அஜித் குமார் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அவர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like