- by Editor
- 1 year ago
'ஜனாதிபதி வேட்பாளராக பஸில் களமிறங்க வேண்டும்'
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ஷவைப் போட்டியிடுமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்து உடனடியாகக் களத்தில் இறங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர் என்று பஸில் தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆகியன அவர்களின் வேட்பாளர்களை இப்போதே அறிவித்துள்ளன. ஆனால், ஆளும் கட்சியான மொட்டுக் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. ஒரு தரப்பு ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த வேண்டும் என்றும், இன்னொரு தரப்பு பிரபல தொழிலதிபர் தமிக்க பெரேராவை நிறுத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றன.
ஆனால், இவர்களை விட வேட்பாளருக்குத் தகுதியானவர் பஸில் ராஜபக்ஷதான் என்று கருதுகின்றார்கள் மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்.
இதனால் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்துவிட்டு உடனடியாகக் களத்தில் குதிக்குமாறு மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பஸிலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை அறியமுடிகின்றது.