- by Editor
- 2 weeks ago
ஜனவரியில் புதிய கூட்டணி உருவாக்கப்படும்: திஸ்ஸ அத்தநாயக்க தகவல்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரும் இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
என்ற ரீதியிலும் பல்வேறு தரப்பினருடன் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் அரசாங்கத்தில் உள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தங்களது கொள்கைகளுக்கு அமைய, புதிய கூட்டணிக்கான சட்ட வரைவை தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.