Friday, October 9, 2026

செல்வச்சந்நிதியானுக்கு இன்று தேர்த் திருவிழா!


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று இரவு சப்பரத் திருவிழா நடைபெற்றது. இன்று தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.

நாளை காலை 8 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், மாலை 6. 30 மணிக்கு மௌனத் திருவிழாவுடன் வருடாந்தப் பெருந்திருவிழா நிறைவுறும்.

இதேநேரம், தேர், தீர்த்தத் திருவிழாக்களையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள், சுகாதார, குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் சந்நிதியான் ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள 20 மடங்களில் அன்னதானமும் நடைபெறும். 

you may also like