Saturday, October 10, 2026

துல்கர் சல்மானின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு அறிவிப்பு


மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான துல்கர் சல்மான், ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்திருந்தார்.

தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐயம் கேம்’ திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் 41ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பொம்மா பொம்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ள முதல் பாடல் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி மாலை 5.04 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

you may also like