Sunday, October 11, 2026

செங்கடலில் சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு


செங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகிலிருந்து 5 பேர் சடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 7 பேரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 சுற்றுலாப்பயணிகளுடன் பயணித்த படகொன்றே கடந்த திங்கள் கிழமை விபத்துக்குள்ளாகியிருந்தது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இருவரும் சுவிஸ்ஷர்லாந்து பிரஜை ஒருவரும், எகிப்தியர்கள் இருவரும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may also like