Tuesday, October 6, 2026

சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு அடித்த ஜாக்பாட் - தமிழக அரசின் அதிரடி அனுமதி


ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஷ்வாசிகா, நட்டி சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

நாளை மறுநாள் (மே 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கருப்பு திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like