- by Editor
- 2 years ago
இந்தியாவின் சுதந்திர தினம்: இன்று சென்னை கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்
-
- by Editor,
- 1 month ago
- in இந்திய செய்திகள்
இந்திய சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டையில் இன்று சனிக்கிழமை முதல்வர் ஜோசப் விஜய் தேசியக் கொடியேற்றுகிறார்.
மேலும், துணிவு சாகச செயலுக்கான விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது போன்றவற்றையும் முதல்வர் விஜய் விருதாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கிறார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை அமைந்துள்ள ராஜாஜி சாலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பொதுத்துறை மேற்கொண்டுள்ளது.
சுதந்திர தின விழாவுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளன .
இன்று சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசியக் கொடியை முதல்வர் விஜய் ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார். இந்த உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளையும் முதல்வர் விஜய் வழங்குவார்.