Wednesday, October 7, 2026

நெடுந்தீவு கடற்பரப்பில் சிக்கிய 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு


இலங்கை கடற்பரப்பிற்குள் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (5) இரவு இந்திய இழுவைப் படகு ஒன்று கடும் கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து, மீனவர்களை மீட்கும் நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் உடனடியாக ஆரம்பித்தனர்.

நீண்ட நேர மீட்புப் பணியின் பின்னர், இன்று (6) குறித்த 11 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக கரையிறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடல் கொந்தளிப்பால் கரையொதுங்கிய இந்திய இழுவைப் படகை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

you may also like