Thursday, October 8, 2026

அசாமில் பேருந்து விபத்து: 14 பேர் பலி, 30 பேர் காயம்


அசாம் மாநிலத்தில் அத்கேலியா கோலாகாட் பாலிஜான் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. நிலக்கரி ஏற்றிச் சென்ற லொரி ஒன்று பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில், கோலாகாட் பொலிஸ் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் கூறுகையில், அந்த பேருந்தில் 45 பேர் இருந்தனர். அவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடர்ந்த மூடுபனி காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சரியான காரணத்தைக் கண்டறிய நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

you may also like