Friday, October 9, 2026

சீன வணிக வளாகத்தில் தீ விபத்து - 39 பேர் பலி


சீனாவின், யுஷ_யி மாவட்டத்திலுள்ள பிரபல வணிக வளாகமொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் பற்றிய தீயானது கட்டடத்தின் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ள நிலையில், வணிக வளாகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

இதன்காரணமாக ஏராளமான ஊழியர்களும், நுகர்வோரும் அந்த வணிக வளாகத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

you may also like