Friday, October 9, 2026

நிலவில் மனிதன் கால் வைத்த படம் நீக்கமா? அமெரிக்க பாஸ்போர்ட்டில் இடம்பிடிக்கும் ட்ரம்ப்


அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படம் இடம்பெறும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சிறப்பு கடவுச்சீட்டுகளை வெளியிட அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மாதிரி வடிவமைப்பின்படி, இந்த புதிய கடவுச்சீட்டுகளில் ட்ரம்ப்பின் உருவம், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் வரிகள் மற்றும் தேசியக் கொடி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், அவரது கையொப்பம் தங்க நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பதிப்பு கடவுச்சீட்டுகள் வாஷிங்டன் கடவுச்சீட்டு முகவரகத்தில் (Washington Passport Agency) மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அமெரிக்க குடிமக்கள் இதனைப் பெற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனுடன், 250 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.

அவற்றில் முக்கியமானவை:

ட்ரம்ப் உருவம் கொண்ட தங்க நாணயங்களை அமெரிக்க மின்ட் (US Mint) வெளியிட திட்டம்

அமெரிக்க காகிதப் பணத்தில் கையெழுத்திடும் முதல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி என்ற சிறப்பு

கென்னடி கலை மையம் “ட்ரம்ப்-கென்னடி மையம்” என பெயர் மாற்றம் செய்யும் திட்டம்

வொஷிங்டன் டி.சி.யில் 250 அடி உயர “ஆர்க் டி ட்ரம்ப்” வெற்றி வளைவு அமைக்கும் திட்டம்

தற்போது அமெரிக்க கடவுச்சீட்டுகளில் நிலவுப் பயணம் மற்றும் சுதந்திர தேவி சிலை போன்ற வரலாற்றுச் சின்னங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ட்ரம்ப் உருவப்படம் சேர்க்கப்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியை இடித்து நடன அரங்கம் கட்டும் திட்டத்திற்கு எதிராக வரலாற்று பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

you may also like