- by Editor
- 8 months ago
சர்வதேச சந்தையில் சரிந்தது தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (10) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold) விலை 4,174.9 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி (Silver) ஒரு அவுன்ஸ் விலை இன்று 63.84 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இலங்கையிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.