- by Editor
- 1 year ago
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - இன்று முதல் கையெழுத்து சேகரிப்பு
-
- by Editor,
- 3 days ago
- in இலங்கை செய்திகள்
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 49 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை இன்று (06) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு முன்னதாக, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.