Friday, October 9, 2026

பன்னீர்செல்வத்தை அ.தி.மு.கவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்


“அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு இல்லை.”

- இவ்வாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

''நான் பலமுறை சொல்லிவிட்டேன். அவர் 4 வருடமாக கட்சியில் இணைய வேண்டும் என கேட்டு வருகிறார். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது என்பது நான் எடுத்த முடிவு இல்லை. 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்த எடுத்த முடிவின்படி, ஓ.பி.எஸ். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு இழைத்த துரோகம் காரணமாக பொதுக்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு இது.

2026 தேர்தல் முடிவில் அ.தி.மு.கதான் ஆட்சியமைக்கும். தே.மு.திகவுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் உங்களிடம் தெரிவிப்போம். சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி இறுதி வடிவம் பெற்றவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

you may also like