- by Editor
- 3 weeks ago
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நேற்று (03.08.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், தஞ்சாவூரில் உள்ள பனகல் கட்டிடம் முன்பு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாக கருத்து தெரிவித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்ததாகவும், அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.