- by Editor
- 2 years ago
மட்டக்குளி கோர விபத்து - காரின் சாரதி கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் உறுதி
-
- by Editor,
- 3 weeks ago
- in இலங்கை செய்திகள்
மட்டக்குளி பகுதியில் மூன்று பேரின் உயிரிழப்புக்கு காரணமான கோர விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருளை உட்கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, அவர் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து பிரதேச மக்கள் உடனடியாகச் செயற்பட்டு, காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.