Wednesday, October 7, 2026

பங்களாதேஷில் இராணுவத்தினரை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்


பங்களாதேஷ் இராணுவம், அரசியலில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி இராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர் .

 இந்நிலையில், பங்களாதேஷ் அரசியலில் அந்நாட்டு இராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, இது தொடர்பாக தன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை, இந்தியாவின் ஆதரவுடன் மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்சியாக செயற்படுத்துவதற்கு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன .

இவ்விடயம் தொடர்பாக கடந்த 11ஆம் திகதி தங்களை அழைத்து இராணுவத்தினர் கலந்துரையாடினர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இராணுவத்தினர் அவர்கள் கட்டுப்பாடுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும்.

 நாட்டுக்குள் நுழைந்து அரசியலில் தலையிடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம், என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பங்களாதேஷ் இராணுவத்தினரை எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


you may also like