Wednesday, October 7, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு


2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்கு தலைமறைவாக இருக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னர் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, முன்னாள் கடற்படைத் தளபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன்போது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றமற்றவர் என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

you may also like