Thursday, October 8, 2026

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு - செப்டம்பர் 22ஆம் திகதி தீர்மானம்


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான பரிசீலனையை நிறைவு செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்த உத்தரவை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக மேலதிக எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குழாம் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது.

you may also like