Friday, October 9, 2026

திருமலை மூதூர் இறால் பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் மக்கள் அச்சத்தில்


மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைப்பரிச்சான் கணேசபுர பகுதிகளை இணைக்கும் இறால் பாலம் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

மூதூர் பிரதேசத்தில் பல இடங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டாலும் கூட செய்ய வேண்டிய சில பகுதிகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

இறால் பாலம் மிக நீண்ட காலமாகச் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த பாலத்தின் ஊடாகப் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தப் பாலத்தின் ஊடாக பயணம் செய்கின்றனர். இந்தப் பிரதேச மக்கள் அடிப்படை வாழ்வாதார பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்தப் பாலத்தின் ஊடாகப் பயணிக்கவேண்டியுள்ளது.

மற்றும் பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் அரச ஊழியர்கள், நோயாளிகள் பலர் இந்தப் பாலத்தின் ஊடாக சிரமத்துக்கு மத்தியில் சென்று வருகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு இந்தப் பாலத்தை மக்களின் நலன் கருதி அமைத்துத் தர வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோளாகும்.

you may also like