Saturday, October 10, 2026

கொழும்பு வைத்தியசாலையில் மயக்க மருந்துக்கு பற்றாக்குறை


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

Isoflurane மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில், இந்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

you may also like