Saturday, October 10, 2026

கொழும்பில் இன்று முதல் மீண்டும் பேருந்து முன்னுரிமைப் பாதை


கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (29) முதல் பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும், பிற்பகல் 4.00 மணி முதல் 7.00 மணி வரையும் பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் அமுலில் இருக்கும்.

இந்த நடைமுறை இன்று முதல் முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டத்தை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like