Saturday, October 10, 2026

நோயாளிகளுக்கான உணவு விநியோக திட்டம் ஆரம்பம்


அரசாங்க மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போஷாக்கான மற்றும் விசேடமான உணவுகளை வழங்கும் புதிய முன்னோடித் திட்டம், முதன்முறையாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நோயாளிகளின் பசியைத் தூண்டும் வகையிலும், ஊட்டச்சத்து குறையாமலும் இருக்க விசேடமாக வடிவமைக்கப்பட்ட தட்டுகளில் உணவு வழங்கப்படுகின்றது.

இதன்படி சோறு, மரக்கறிகள், மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அனைத்தும் தனித்தனியாகப் பரிமாறப்படும்.

நோயாளிகளின் திருப்தியை அதிகரிப்பதுடன், தரமான உணவு மூலம் அவர்களின் விரைவான குணமடைதலை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

you may also like