Thursday, October 8, 2026

அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல வெளியேறும் பகுதிகளில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடம், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு பகுதி மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக அதிகளவிலான வாகனங்கள் பயணிப்பதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் பொறுமையுடனும் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

you may also like