- by Editor
- 3 months ago
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மூதூர் - பஹ்ரியா நகர் களப்பிலிருந்து நேற்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் - பஹ்ரியா நகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு மணல் மூடையொன்றும் வயிற்றில் கட்டப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.