Thursday, October 8, 2026

ரயில்வே இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்


ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது இன்று (14) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் காரணமாக, இணையத்தளத்தில் உள்ள ரயில்களின் நேர அட்டவணை தொடர்பான தகவல்களை பெறும் பகுதி தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் ரயில் நேரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணையத்தளத்தை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேவையை விரைவில் மீட்டெடுக்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

you may also like