- by Editor
- 8 months ago
ஐக்கிய அரபு இராச்சியத் தூதர் வடக்கு ஆளுநரைச் சந்தித்தார்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல் அமீரி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் (01) மாலை யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் இதற்கான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், ஆளுநரிடம் உறுதியளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.