Thursday, October 8, 2026

கெஹலிய ரம்புக்வெல வைத்தியசாலையில்!


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு கைதான கெஹலிய ரம்புக்வெல நேற்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானால் உத்தரவிடப்பட்டது.

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதையடுத்து, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

you may also like