- by Editor
- 5 days ago
இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் இரு பலஸ்தீனியக் குழந்தைகள் பலி
-
- by Editor,
- 10 months ago
- in உலக செய்திகள்
இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் பலஸ்தீனியக் குழந்தைகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெப்ரோன் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீன மக்கள் தற்காலிகமாகக் குடியேறியுள்ள பகுதியில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக பலஸ்தீனத்தின் உள்ளூர் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பகுதியை விட்டுக் குடியிருப்பாளர்களை வெளியேறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேலிய படைகள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.