- by Editor
- 1 year ago
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நள்ளிரவுடன் நிறைவு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.