- by Editor
- 2 years ago
வாகன விபத்துக்கள் காரணமாக இந்த வருடத்தில் 1,778 பேர் பலி
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல், மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன என பொலிஸ் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் 1,778 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், 3,428 பாரியளவான வாகன விபத்துக்களும், 6,241 சிறியளவான வாகன விபத்துக்களும் இந்த காலப்பகுதியினுள் பதிவாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.