Friday, October 9, 2026

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு.


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு.

டுபாயில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் புகைப்படத்துடன் மூன்று போலி கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவு நாளை அறிவிக்கப்படும் என்றும் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like