Saturday, October 10, 2026

லிஃப்டில் மாட்டிக்கொண்ட 4 எம்.பிக்கள் !


லிஃப்டில் மாட்டிக்கொண்ட 4 எம்.பிக்கள் !

பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மின்னுயர்த்தியில் (லிஃப்டில்) சிக்கிக்கொண்ட சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவமானது, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ஒரு ஆய்வு அமர்வில் கலந்து கொண்டிருந்த வழக்கறிஞர்கள் சமிந்த்ராணி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ மற்றும் சதுரா கலப்பத்தி, ஆகிய நான்கு எம்.பிக்களும் மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஒரு லிஃப்டிலேயே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்தபோது, பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஆய்வு மண்டபத்தில் இருந்து லிஃப்டில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சித்ரால் பெர்னாண்டோ, அவர் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் லிஃப்டில் சிக்கிக்கொண்டதாகவும், ஊழியர்கள் குழு தங்களை மீட்தெடுத்ததாகவும் கூறினார்.

சம்பவம் குறித்து, கண்டி மாவட்ட கவுன்சிலர் சமிந்த்ராணி கிரியெல்ல கூறுகையில், எதிர்பாராத சம்பவத்தால் தான் மிகவும் சங்கடப்பட்டதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.


you may also like