Thursday, October 8, 2026

வல்வெட்டித்துறையில் களவு: பெண் உட்பட ஏழு பேர் கைது!


வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற களவுச் சம்பவங்களில் ஐந்தரை இலட்சம் ரூபா பணமும் 16 பவுண் நகைகளும் களவு போயுள்ளன.

களவில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபருக்கு 19 வயது எனவும், அவர் போதைக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

you may also like