Saturday, October 10, 2026

கிரெம்ளினுக்குச் சென்ற அவசரக் கடிதம் - புடினுக்கு நேருக்கு நேர் சவால் விட்ட ஜெலென்ஸ்கி


போரை முடிவுக்குக் கொண்டு வர புதிய முயற்சியாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேருக்கு நேர் சந்திப்பு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில், ஐரோப்பாவில் நடைபெறும் போரின் கவனம் மீண்டும் அமெரிக்காவுக்கு மாறும் வரை காத்திருப்பது தவறு என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான நேரடி பேச்சுவார்த்தை மூலமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலம் வரை முழுமையான போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஷெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் இந்த நேரடி சந்திப்பு முன்மொழிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டால் அது மிகவும் நல்ல முடிவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் ஜனாதிபதியின் கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்திய கிரெம்ளின், அது குறித்து புடினுக்கு விளக்கமளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

you may also like