Friday, October 9, 2026

'கருப்பு'சாமி கெட்டப் கொடுத்த இன்ஸ்பிரேஷன் - சூர்யாவை 'வேள்பாரி'யாக்க துடிக்கும் இயக்குனர் ஷங்கர்


இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஷங்கர், தனது அடுத்த திரைப்படமாக வரலாற்றுப் புதினமான வேள்பாரியை திரையரங்கிற்கு கொண்டு வரத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மாண்ட திரைப்படங்களின் இயக்குநர்

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கிய ஷங்கர், ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் மற்றும் ஐ போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தனது எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மற்றும் ஈரம் போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

‘கேம் சேஞ்சர்’க்கு பிறகு புதிய முயற்சி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் இந்தாண்டு ஜனவரியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து, ஷங்கரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சூர்யாவே சரியான தேர்வா?

‘வேள்பாரி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்தக் கதாபாத்திரத்திற்கு சூர்யா மிகவும் பொருத்தமானவர் என ஷங்கர் கருதுவதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், ‘வேள்பாரி’ திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

you may also like