- by Editor
- 2 years ago
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று சிக்கினர்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் படுகொலையைத் திட்டமிட்டனர் எனக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேகநபர்கள் நேற்று கைதாகியுள்ளனர்.
கடந்த வாரம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல் வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார்.
கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தமை தொடர்பான சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
கம்பஹா பகுதியில் வைத்துக் கொழும்பு குற்றப் பிரிவினரால் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.