- by Editor
- 7 months ago
படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் மாயம் - மீட்பு பணிகள் தீவிரம்!!
படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் மாயம் - மீட்பு பணிகள் தீவிரம்!!
மாத்தறையில் உள்ள தெவுந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் களுத்துறையில் உள்ள பேருவளை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் நேற்று (27) மாலை வேறு வேறு இடங்களில் கவிழ்ந்ததில் ஐந்து மீனவர்கள் காணமல் போயுள்ளதாக மீன்வளத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்
இந்நிலையில், கடலில் கவிழ்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பெல் 412 ஹெலிகாப்டரை விமானப்படைக்கு அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
விபத்தில் இருந்து ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மற்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், கடற்படை ஒரு தேடுதல் நடவடிக்கைக்காக கப்பலை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.