- by Editor
- 8 months ago
டயனா கமகே மீதான வழக்கு ஒத்திவைப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தார் எனத் தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 7 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் தனுஜா லக்மாலி முன் விசாரிக்கப்பட இருந்த நிலையில், பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று சமூகமளிக்காமையின் காரணத்தால் குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனவல இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.