- by Editor
- 6 months ago
கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு விசேட இ.போ.ச பேருந்து சேவைகள் ஆரம்பம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையிலும், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கதிர்காமம் வரையிலும் இந்த விசேட பேருந்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, கதிர்காமம் பேருந்து நிலையத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்காக இரண்டு விசேட முன்பதிவு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கதிர்காம உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் இந்த விசேட போக்குவரத்து சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.