- by Editor
- 6 months ago
ஏப்ரல் 4 ஆம் திகதி மோடி இலங்கைக்கு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
இந்தியபி பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள இந்தியப் பிரதமர், 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் .
கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட்டோரைச் சந்திக்கவுள்ள இந்தியப் பிரதமர், சம்பூருக்குக் ஹெலியில் சென்று மின்திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதேபோல் அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்குச் சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணத்தையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்தியாவில் இருந்து உயர்மட்ட பாதுகாப்புக் குழு ஒன்று தற்போது கொழும்பு வந்துள்ளது.
முன்னதாக அதானி மின்திட்டம் தொடர்பில் இலங்கையில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின்போது அது தொடர்பில் முக்கியமாக ஆராயப்படும் என்று தெரிகின்றது.