- by Editor
- 2 years ago
மின்வெட்டு காரணமாக நாளை நீர்வெட்டு அமுலுக்கு
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக, நாளை (29) தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.