- by Editor
- 2 years ago
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்கவும்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெயர்குறித்து அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அவற்றை விரைவாக சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதியன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உறுப்பினர் பதவி உரித்தாகியுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றங்கள் சார்பாக பெயர்குறித்து அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டியுள்ளது.
எனினும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் சில மாவட்டங்களில் பெயர்குறிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை இதுவரை பூர்த்திசெய்து அனுப்பவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், உறுப்பினர் பதவி உரித்தாகியுள்ள யாதேனும் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி, சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்றங்களுக்காக பெயர்குறித்து அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இதுவரை அனுப்பியிருக்கவில்லை எனில், அந்த அரசியல் கட்சியின் செயலாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களும் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய பெயர்குறித்த நியமனங்களை துரிதமாக சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு வழங்குமாறு அறிவித்துள்ளது.
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைய தேர்தலைத் தொடர்ந்து உறுப்பினர் பதவி உரித்தாகி இருப்பின், துரிதமாக உறுப்பினர்களைப் பெயர்குறித்து அனுப்புவது போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.