- by Editor
- 8 months ago
உள்ளக விசாரணை மூலமே நீதி வழங்க அரசு நடவடிக்கை
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
"இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி வழங்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும்" - என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
"இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் இங்கிருந்து அல்ல ஜெனிவா சென்று கூக்குரல் இட்டாலும் அதற்கு எமது அரசு அடிபணியாது" - என்றும் அவர் குறிப்பிட்டார்.
"உள்ளக விசாரணையைத்தான் ஐ.நா. மனித உரிமைகளின் பேரவையின் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் இறையாண்மையை மீறி சர்வதேச சமூகம் செயற்பட முடியாது." - என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கடந்த அரசுகள் போல் நாமும் நீதி வழங்கும் நடவடிக்கைகளில் பின்னிற்க மாட்டோம். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியே தீருவோம்." - என்றும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.