Saturday, October 10, 2026

பஸ் விபத்துக்களை தடுக்க அறிமுகமாகும் (AI) தொழிநுட்பம்.


பஸ் விபத்துக்களை தடுக்க அறிமுகமாகும் (AI) தொழிநுட்பம்.

நாட்டில் தொடர்ந்து நிகழும் பஸ் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அரசு  அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பஸ்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்ப (AI) சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

"எதிர்வரும் இரண்டு மாதங்களில் சுமார் 40 பேரூந்துகளில் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த (AI) தொழிநுட்ப கருவிகள் மூலம் சாரதிகளுக்கு ஏற்படக்கூடிய நித்திரைக் கலக்கம் கண்காணிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

you may also like