- by Editor
- 2 years ago
உலக அரங்கில் இலங்கையின் பெருமை - திருமதி அழகிப் போட்டியில் 3ம் இடம்
அமெரிக்காவில் நடைபெற்ற 41-ஆவது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது.
இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகி மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
போட்டியை நடத்திய அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தை கைப்பற்றினார்.
இந்த உலகளாவிய அழகிப் போட்டியில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.