- by Editor
- 1 year ago
உலகக்கிண்ண கிரிக்கெட்: நடப்பு சாம்பியனை வீழ்த்தியது இலங்கை
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை இன்றைய போட்டியில் இலங்கை அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி புள்ளிப் பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களால் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமற்போனது.
இங்கிலாந்தின் முதல் ஐந்து விக்கெட்களும் 85 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றார்.
இங்கிலாந்து அணி 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
நீண்ட நாட்களின் பின்னர் இலங்கை அணியில் இடம்பெற்ற அஞ்சலோ மெத்தியூஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். லஹிரு குமார 3 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கை இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு கடந்தது.
பெத்தும் நிஸங்க 77 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 65 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 5 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியலில் இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தமது அடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இன்றைய வெற்றி மூலம் இலங்கை அணி அரை இறுதிக்கான எதிர்பார்ப்புகளை தக்கவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.